முக்கிய அறிவிப்பு:

  • யாரேனும் இறப்புக்கு பிறகு தன்னுடைய கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவோர் இவ்வியக்கத்தில் தெரிவித்து பதிவு செய்து கொள்ளலாம்.
  • இரத்த தானம் செய்ய முன் வருபவர்களும் அதனை இவ்வியக்கத்தில் தெரிவிக்கலாம்.

குறிப்பு:

  • இயக்கத்தில் எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் அனைத்து உறுப்பினர்களும் மனப்பூர்வமாக விருப்பு, வெறுப்பு இன்றி ஒத்துழைக்க வேண்டும்.
  • இவ்வியக்கத்தின் பயன்கள் மற்றும் சலுகைகள் அனைத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

ஒத்துழைப்பாளர்கள்:

  • இந்த இயக்கத்தில் ஒத்துழைப்பு தரும் நண்பர்கள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், பொறியாளர்கள், அரசியல் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், காவல்துறை அதிகாரிகள், உடல் உழைப்புப் பணியாளர்கள், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், கான்ட்ரக்டரஸ், பில்ட்ரஸ், ஊடகதுறையினர், தொழிலதிபர்கள், ஜோதிடர்கள், திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் உறுப்பினர்களாக சேர்ந்து ஒத்துழைப்பு அளித்து பயன் அடையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இயக்கத்தில் சலுகைகளை பயன்பெறாதவர்கள்:

  • நமது இயக்கத்தில் உறுப்பினர்களாக இணைந்து எந்த சலுகைகளையும் பெற இயலாமல் இருந்தால் நமது இயக்கத்தில் ஒரு உறுப்பினர் 10 ஆண்டுகள் வரை எந்த பயனும் பெறாதவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

சலுகைகள்:

மருத்துவ உதவி:

  • உறுப்பினர்கள் அனைவருக்கும் அவரவர் தொழில் சார்ந்த பணியில் பணிபுரியும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், மருத்துவ ரீதியாக அறுவை சிகிச்சைக்கு இயக்கத்திலிருந்து 25,000 ரூபாய் வழங்கப்படும். மருத்துவ சீட்டுகள் சரியான முறையில் இருந்தால் மட்டுமே விசாரணை அடிப்படையில் இத்தொகை வழங்கப்படும்.

பெண் வாரிசு சலுகைகள்:

  • உறுப்பினர்களின் வாரிசுகள் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள் என்றால்; அவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினர்களுக்கு ஏதேனும் மரணம் ஏற்பட்டால் அந்த குழந்தைகைகளுக்கு இயக்கத்தின் மூலம் கல்வி மற்றும் திருமணத்திற்கு சிறு உதவிகள் வழங்கப்படும்.

உயிர் இழப்பு காப்பீடு

இழப்பீட்டுத் தொகை:

  • உறுப்பினர்களின் சொந்த இருசக்கர வாகனத்தில் செல்லும் பொழுது விபத்து நேர்ந்து மரணம் அடைந்தால் விசாரணைக்குப் பிறகு உண்மைத்தன்மை கண்டறிந்து இழப்பீடு தொகை வழங்கப்படும்.

இயற்கை மரணம்:

  • 100 ரூபாய் சந்தா, 250 ரூபாய் சந்தா கட்டும் உறுப்பினர்களின் இயற்கை மரணம் அடைந்தால், கட்டிய சந்தா தொகை மட்டுமே வழங்கப்படும்.
  • இயற்கை மரணம் அடைந்தால் 1 வருடத்திற்கு மேல் தங்கள் கட்டும் சந்தாவை பொறுத்து 1+1 காசோலை வழங்கப்படும்.
  • தொடர்ந்து கட்டும் உறுப்பினர்களின் இயற்கை மரணம் அடைந்தால், 3 வருடத்திற்க்கு மேல் 10 வருடத்திற்க்கும் கீழ் எந்த பயனும் அடையாதவர்களுக்கு தங்கள் கட்டும் சந்தாவை பொறுத்து 1+2 காசோலை வழங்கப்படும்.

செயற்கை மரணம்:

  • உறுப்பினர்கள் தற்கொலை, வீண் தகராறு மூலம் இறப்பவர்களுக்கு எவ்வித சலுகைகளும் தர இயலாது. மேலும் மதுவினால் ஏற்படும் நோய்களுக்கும், இறப்புகளுக்கும் எவ்வித சலுகைகளும் தர இயலாது. கட்டிய தொகையை மட்டுமே அளிக்கப்படும்.

தொழில் சார்ந்த மரணம்:

  • 250 ரூபாய் சந்தா கட்டும் உறுப்பினர்களுக்கு ஏதேனும் தொழில் சார்ந்த மரணம் ஏற்பட்டால் மட்டுமே! விசாரணையின் அடிப்படையில் குழுவின் முன்னிலையில் நாமினி வசம் ரூபாய் 7 இலட்சம் இயக்கத்தின் மூலம் காசோலை வழங்கப்படும்.
  • 100 ரூபாய் சந்தா கட்டும் உறுப்பினர்களுக்கு தொழில் சார்ந்த மரணம் ஏற்பட்டால் மட்டுமே! விசாரணையின் அடிப்படையில் குழுவின் முன்னிலையில் நாமினி வசம் ரூபாய் 3 இலட்சம் இயக்கத்தின் மூலம் காசோலை வழங்கப்படும்.

ஈமச்சடங்கு தொகை:

  • உறுப்பினர்களுக்கு திடீரென உயிரிழப்பு (விபத்து மற்றும் இயற்கை மரணம்) நேர்ந்தால் இறந்து அடுத்து ஐந்து மணி நேரத்தில் தனியாகவோ, அல்லது குழுவின் தலைவர் மூலமாக அதனை இயக்கத்திற்க்கு தெரிவித்தால் ஈமச்சடங்கு செலவிற்க்கு (ரூ /-5,000) வழங்கப்படும். மீதமுள்ளத் தொகையை தீவிர விசாரணைக்கு பிறகு சில மாதங்களில் உறுப்பினரால் பரிந்துரைக்கபட்ட (nominee) நபரிடம் காசோலையாக வழங்கப்படும்.

© 2024 TKTMI. All rights reserved | Design by TKTMI.